கிங்ஸ் லெவனை தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

cricketnext
Updated: May 14, 2018, 11:03 PM IST
கிங்ஸ் லெவனை தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல்.
cricketnext
Updated: May 14, 2018, 11:03 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 48-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் களமிறங்கினர். இருவரும் 4 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப்பிடித்தனர். கே.எல்.ராகுல் 21 ரன்களுடனும் கெயில் ரன்களுடனும் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அடுத்துவந்த கருண் நாயர் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்தெடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். மிகப் பெரிய தடுமாற்றத்தை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சந்தித்தது. பின்ச் மட்டும் 26 ரன்கள் அடித்து அணிக்கு ரன் உயர்வதற்கு உதவினார். இருப்பினும் 15.1 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் களமிறங்கினர்.  இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத்தொடங்கினர். விராட் கோலி 28 பந்துகளில்  6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். பார்த்திவ் படேல் 22 பந்துகளை மட்டுமே சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து அவரும் அவுட் ஆகாமல் இருந்தார். இருவரும் 8.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டினர். 8.1 ஓவர்களிலேயே விக்கெட்  இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னேறியுள்ளது.
First published: May 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்