19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

cricketnext
Updated: April 15, 2018, 7:58 PM IST
19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்.
cricketnext
Updated: April 15, 2018, 7:58 PM IST
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 11-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரஹானே மற்றும் டிஜேஎம் ஷார்ட் களமிறங்கினர். ரஹானே அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். டிஜேஎம் ஷார்ட்டும் 11 ரன்கள் வெளியேற சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த கூட்டணி மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். 10 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். குறிப்பாக அவரது ஷாட்டுகள் `கிளாஸ்’ வகையைச் சேர்ந்தவை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது.  பெங்களூர் அணி சார்பில் சாஹல் மற்றும் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

218 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ச் அணி களமிறங்கியது.  ஆனால் தொடக்கத்தில் மெக்கெல்லம் விக்கெட்டை பறிகொடுத்தது. அதன்பிறகு டி காக் மற்றும் விராட் கோலி அணியை சரிவிலிருந்து மீட்கத் தொடங்கினர். அபாரமாக விளையாடிய விராட் கோலி 20 பந்துகளி 57 ரன்களை எடுத்தார். ஆனால் அடுத்தெடுத்த விக்கெட்டுகள் விழுந்துகொண்டெ இருந்ததால் பெங்களூர் அணி இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
First published: April 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்