மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

cricketnext
Updated: May 16, 2018, 5:43 PM IST
மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று பலப்பரீட்சை
வெற்றி மகிழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்.
cricketnext
Updated: May 16, 2018, 5:43 PM IST
இன்றைய போட்டியில் கிங்ஸ்ல் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஃப்ளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கும் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத இருக்கின்றன. ஃப்ளே ஆப் சுற்று வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருப்பதால் இந்தப் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மும்பை  இந்தியன்ஸ் அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று  10 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கு ஃப்ளே ஆப் சுற்றில் நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்