தொடர் தோல்வியைத் தவிர்க்குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்?

cricketnext
Updated: April 15, 2018, 7:17 PM IST
தொடர் தோல்வியைத் தவிர்க்குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ்
cricketnext
Updated: April 15, 2018, 7:17 PM IST
அடுத்தெடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாளை நடக்கவிருக்கிற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.  நேற்று நடந்த போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அனியை வீழ்த்தியதால் நாளைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி உற்சாகமாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் நாளையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்  நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்தப் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளில் விளையாடியுள்ள முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் அணியை தோற்கடித்தது. ஆனால் அடுத்தெடுத்து விளையாடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும் தோல்வியைத் தழுவின.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியைத் தழுவியது. பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. ஆனால் டக்வொர்த்ஸ் விதிப்படி தோல்வியைச் சந்தித்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடித்தது. இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளதால் நாளைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
First published: April 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்