முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் அணி மோதல்

cricketnext
Updated: May 15, 2018, 3:47 PM IST
முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் அணி மோதல்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்.
cricketnext
Updated: May 15, 2018, 3:47 PM IST
ஃப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைப்பதற்கான முக்கியமான ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் 49-வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் இருப்பதால் ஃப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு சமமாக உள்ளது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாகும்.

கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று மிக வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் தொடர்ந்து 5 அரைசதம் அடித்து அருமையான பார்மில் உள்ளார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ், கவுதம் உள்ளிட்ட வீரர்கள் சிறந்த ஆல்ரவுண்டர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் தலமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் இரு தோல்வியையும் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சுனில் நரேன், ரஸ்ஸல் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இரு அணிகள் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும்.
First published: May 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்