6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

cricketnext
Updated: May 15, 2018, 11:42 PM IST
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி
அதிரடியாக விளையாடி 41 ரன்கள் குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்
cricketnext
Updated: May 15, 2018, 11:42 PM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 49-வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக திரிபாதி மற்றும் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். திரிபாதி 27 ரன்களுடன் ரஸ்ஸல் வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரஹானே 11 ரன்களுடன் வெளியேறினார். ஜேசி பட்லர் மட்டும் அதிரடியாக விளையாடி 39 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டை இழந்ததால் அந்த அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான் இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன் மற்றும் லயின் களமிறங்கினர். 7 பந்துகளில் 21 ரன்கள் அடித்த சுனில் நரேன் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த உத்தப்பாவும் 4 ரன்களில் வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறிது தடுமாற்றத்தை சந்தித்தது. பின்பு லயின் மற்றும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

லயின் 45 ரன்களுடன் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார். ஆனால் கடைசி வரை தினேஷ் கார்த்திக் விளையாடி 41 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பெறச் செய்தார். 18 ஓவர்களிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 14 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஃப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
First published: May 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்