கெயில் அணிக்கு திரும்பியது மற்ற அணிகளுக்கு சோகமான செய்தி - கே.எல்.ராகுல்

cricketnext
Updated: April 16, 2018, 6:36 PM IST
கெயில் அணிக்கு திரும்பியது மற்ற அணிகளுக்கு சோகமான செய்தி - கே.எல்.ராகுல்
அதிரடியாக விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில்.
cricketnext
Updated: April 16, 2018, 6:36 PM IST
நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் விளாசி மற்ற அணிகளுக்கு எச்சரிக்கையை கிறிஸ் கெயில் விடுத்துள்ளார் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன்ப் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.  முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத கிறிஸ் கெயில் நேற்றைய போட்டியில் களமிறங்கினார். அவர் இறங்கும் போதே மைதானத்தில் ரசிகர்கள் அவரை மிகப் பெரிய கரகோஷத்துடன் வரவேற்றனர். அதற்கேற்றார்போல் கிறிஸ் கெயில் தனது அதிரடியை தொடங்கினார். மைதானத்தின் நான்கு திசைகளிலும் பந்தை பறக்கவிட்டார்.22 பந்துகளில் ஐபிஎல் போட்டிகளில் தனது 22-வது அரைசதத்தை பதிவுசெய்தார். அதன்பின்னும் மட்டையை விளாசிய கிறிஸ் கெயில் 33 பந்துகளில் 63 ரன்களை எடுத்து வாட்சன் வீசிய பந்தில் இம்ரான் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தான் இறங்கிய முதல் போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கெயிலுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டு இருக்கின்றன. மேலும் கெயிலின் அதிரடி பஞ்சாப் அணிக்கும் வலிமையை கூட்டியுள்ளது. இதுகுறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கே.எல். ராகுல் கூறுகையில், “ கிறிஸ் கெய்ல் பந்தை சிறப்பாக அடித்து விளையாடுவது எங்கள் அணிக்கு மிகவும் சிறப்பானது. அதேவேளையில் மற்ற அணிகளுக்கு அது கெட்ட செய்தியாகும். தனி ஒரு மனிதனாக அணியை வெற்றி பெற வைப்பார் என்பது நமக்குத் தெரியும். அவருடைய நாளில் துவம்சம் செய்து விடுவார். இன்றும் (நேற்று) அதைத்தான் செய்தார். அவருடைய இந்த ஆட்டம் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்”  என்று கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்