• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அஸ்வினை தூக்கி சாப்பிட்ட 16 வயது வீராங்கனை: முதல் போட்டியிலேயே 4 பேர் ‘மன்கடிங்’முறையில் ரன்அவுட்

அஸ்வினை தூக்கி சாப்பிட்ட 16 வயது வீராங்கனை: முதல் போட்டியிலேயே 4 பேர் ‘மன்கடிங்’முறையில் ரன்அவுட்

4 வீராங்கனைகளை மன்கட் ரன் அவுட் செய்த கேமரூன் வீராங்கனை

4 வீராங்கனைகளை மன்கட் ரன் அவுட் செய்த கேமரூன் வீராங்கனை

டி20 உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில் கேமரூன் அணிக்கு அறிமுக போட்டியில் ஆடிய 16 வயது வீராங்கனை மேவா தவ்மா 4 வீரர்களை ரன்னர் முனையிலேயே மன்கடிங் என்று அழைக்கப்படும் முறையில் ரன் அவுட் செய்தது பரபரப்பாகியுள்ளது.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    எதிரணி வீரர்கள் 4 பேரை அபார பீல்டிங்கில் ரன் அவுட் செய்திருந்தால் இன்னொரு ஜாண்ட்டி ரோட்ஸ் என்று அழைக்கலாம். ஆனால் ஒரே போட்டியில் அதுவும் 16 வயதில் 4 எதிரணி வீரர்களை ரன்னர் முனையில் மன்கடிங் செய்து ரன் அவுட் செய்திருக்கிறார் என்றால் அவரை என்ன சொல்வது? அஸ்வினைக் கடந்த இளம் அஸ்வினே வருக வருக என்றுதான் கூற வேண்டும்.

    விதிப்படி சரியென்றாலும் எதிரணி வீரர்களை ரன்னர் முனையில் கிரீசை விட்டு தாண்டும் வரை காத்திருந்து ரன் அவுட் செய்வது முறையாகாது என்றே கருத வேண்டும். ஒரு மேட்சில் ஒருவர் இப்படி ரன் அவுட் செய்யப்பட்டாலே பெரிய சர்ச்சைகள் கிளம்பி விவாதம் பிறக்கும், ஆனால் மேவா தவ்மா 4 எதிரணி வீராங்கனைகளை இப்படி ரன்னர் முனையில் ஆக்‌ஷனை முடிக்காமலேயே ரன் அவுட் செய்தது கடும் பரபரப்பாகியுள்ளது. ஆனால் இந்த முறையில் ரன் அவுட் செய்து விட்டு ஏதோ திறமையினால் வீழ்த்தியது போல் கொண்டாடியதுதான் உகாண்டாவுக்கு வேதனையாக இருந்திருக்கும்.

    உகாண்டா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4 உகாண்டா வீராங்கனைகளை இப்படித்தான் தண்டித்தார் மேவா தவ்மா. இவர் ஒரு வலது வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசி விக்கெட் எடுத்தது என்னவோ ஒரு விக்கெட்தான். 4 ஓவர் 27 ரன் 1 விக்கெட், ஆனால் மன்கடிங் முறையில் 4 உகாண்டா வீராங்கனைகளை காலி செய்தார்.

    உகாண்டா வீராங்கனை பிராஸ்கோவியா அலாகோவை (31) இவர் பவுல்டு செய்தார். ஆனால் அதன் பிறகு உகாண்டா அணி ரீட்டா மூசாமாலி, கெவின் ஆவினோ மூலம் சதக்கூட்டணி அமைத்தது. 153/1 என்று வலுவான நிலையில் இருந்தது உகாண்டா.



    இந்நிலையில் தான் ஆவினோவை முதலில் ரன்னர் முனையில் பந்து வீசாமலேயே மன்கடிங் முறையில் ரன் அவுட் செய்தார், பிறகு மூசாமாலி (59), கேப்டன் இம்மாகுலேட் நகிசூயி (21), இறுதியாக ஜேனட் மபானாசி (5) ஆகியோரை மன்கடிங் முறையில் அவுட் செய்தார். ஆனால் அவுட் ஆனவர்கள் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் பேசாமல் போனதுதான் ஆச்சரியம். ஆனாலும் உகாண்டா அணி 190/6 என்று பெரிய ஸ்கோரை எடுத்தது. பிறகு மன்கடிங் செய்த கேமரூன் அணியை 35 ரன்களுக்குச் சுருட்டியது. அதுதான், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் தர்மத்தை வெல்ல முடியாது என்பது.

    ஜாஸ் பட்லரை ரன் அவுட் செய்த அஸ்வின்.


    ஜோஸ் பட்லரை அஸ்வின் இவ்வாறு ரன்னர் முனையில் பந்து வீச வரும்போதே ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுது, ஆனால் கேமரூன் வீராங்கனை தவ்மா அஸ்வினைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டார், 4 பேரை இப்படி வீட்டுக்கு அனுப்ப தைரியம் வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: