Home /News /sports /

தம்பி! வேண்டாம்! 156 கிமீ போடுறேன்னு 256 ரன் கொடுக்கறே - உம்ரன் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி

தம்பி! வேண்டாம்! 156 கிமீ போடுறேன்னு 256 ரன் கொடுக்கறே - உம்ரன் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி

உம்ரன் மாலிக்

உம்ரன் மாலிக்

வேகம் மட்டும் போதாது தம்பி! விவேகமும் வேண்டும் என்று கூறுவது போல் சன் ரைசர்ஸ் அணிக்கு ஆடும் அதிவேக பவுலர் உம்ரன் மாலிக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

    வேகம் மட்டும் போதாது தம்பி! விவேகமும் வேண்டும் என்று கூறுவது போல் சன் ரைசர்ஸ் அணிக்கு ஆடும் அதிவேக பவுலர் உம்ரன் மாலிக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

    கடந்த 3 போட்டிகளில் 10 ஓவர்களில் 125 ரன்களை விட்டுக் கொடுத்தார் உம்ரன் மாலிக், இது சன் ரைசர்ஸ் அணியின் தோல்வியில் முடிந்தது. விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை உம்ரன் மாலிக். ருதுராஜ் போன்ற வீரர்களெல்லாம் இவரை சாத்தி எடுத்தனர். ஒருவிதத்தில் இவரைப் பயன்படுத்த சரியான கேப்டன்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும் கோலி போல் ஒருவர் வேண்டும்.

    இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறும்போது, “நான் நினைக்கிறேன் உம்ரன் மாலிக்கிடம் அவர் முகத்துக்கு நேராக பிரமாதம், அருமை, பிரில்லியண்ட், உனக்கு கிரேட் ஃபியூச்சர் இருக்கிறது, இந்தியாவுக்காக ஆடப்போகிறாய் என்றெல்லாம் சொன்னால் அவர் உற்சாகமடையவே செய்வார், நாமும் அப்படித்தான். ஆனால் தம்பி நீங்கள் 156 கிமீ வேகம் வீசினாலும் ஒழுங்காக வீசவில்லை எனில் 256 ரன்கள் போகும் தம்பி.

    நல்ல வேகமாகத்தன வீசுகிறார், ஆனால் அதை நல்ல இடங்களில் பிட்ச் செய்ய வேண்டும் என்பதையும் மனதில் இருத்த வேண்டும். அல்லது எல்லா பந்துகளையும் அந்த வேகத்தில் வீசாமல் ஒரு ஸ்டாக் பாலாக வைத்திருந்து திடீரென வீச வேண்டும். அப்போதுதான் பேட்டரை அதிர்ச்சியடையச் செய்ய முடியும். இந்தச் சிந்தனையெல்லாம் உன் மனதில் ஓட வேண்டும். சரி செய்யவில்லை எனில் சரியான இடத்தில் வீசவில்லை எனில் மட்டையில் பட்டு 250-300 மைல் வேகத்தில் செல்லும் யாரும் தடுக்க முடியாது.

    மேலும் இப்போது பிட்ச்கள் மாறிவிட்டன, கொஞ்சம் மந்தமாகி பேட்டிங் பிட்ச்களாகி உள்ளன. முதல் 2-3 வாரங்கள் இருந்த வேகம் இப்போது இல்லை. அதனால் அவர் லெந்தை சரியாக வீசவில்லை எனில் பந்து பவுண்டரிக்குப் பறக்கும்.

    மீடியாக்களில் மற்றும் எங்கு பார்த்தாலும் 154 வீசுகிறார் 155 வீசுகிறார் என்ற பேச்சாகவே இருக்கிறது, இந்த டி20 வடிவத்திற்கு இவ்வளவு வேகம் தேவையில்லை. நல்ல இடங்களில் வீச வேண்டும், அவர் அப்படி வீசுவதில்லை. ஸ்டம்ப் அட்டாக் செய்தால் அவர் இன்னும் சீராக வீசுவார். 156, 157 கிமீ வேகம் அருமையானதுதான் ஆனால் அதை நெறிப்படுத்த வேண்டும்” என்றார் ரவி சாஸ்திரி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, SRH

    அடுத்த செய்தி