• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 151.03! முரட்டு வேகம்! - சன் ரைசர்ஸின் உம்ரன் மாலிக்கின் ஐபிஎல் சாதனை (வீடியோ)

151.03! முரட்டு வேகம்! - சன் ரைசர்ஸின் உம்ரன் மாலிக்கின் ஐபிஎல் சாதனை (வீடியோ)

உம்ரன் மாலிக், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

உம்ரன் மாலிக், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் 2021 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக் மணிக்கு 151.03 கிமீ வேகத்தில் அதிவேகப்பந்தை வீசி ஐபிஎல் 2021 தொடரில் அதிவேக பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக் மணிக்கு 151.03 கிமீ வேகத்தில் அதிவேகப்பந்தை வீசி ஐபிஎல் 2021 தொடரில் அதிவேக பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

    உம்ரன் மாலிக் சன் ரைசர்ஸ் அணியில் சந்தீப் சர்மாவுக்குப் பதில் இடம்பெற்றார். தன் முரட்டு வேகத்தினால் கொல்கத்தாவுக்கு எதிராக அசத்தினார். கொல்கத்தாவின் லாக்கி பெர்கூசன் தான் ஐபிஎல் 2021-ன் அதிவேக பவுலர், இவர் மணிக்கு 152.75 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீசி சாதனை புரிந்துள்ளார். முகமது சிராஜ் இதற்கு முன்னர் ஐபிஎல் 20210ல் மணிக்கு 145.97 கிமீ வேகம் வீசி முதலிடத்தில் இருந்தார், இப்போது லாக்கி பெர்கூசன் தான். அவருக்குப் பிறகு முரட்டு வேகம் வீசும் உம்ரன் மாலிக்.

    21 வயதாகும் உம்ரன் மாலிக் டி.நடராஜனுக்கு கோவிட் என்பதால் அணியில் சேர்க்கப்பட்டார். நெட் பவுலராக இருந்தார். இவர் ஒரு டி20 மற்றும் ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் ஆடுயிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஆடியிருக்கிறார். 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

    கேன் வில்லியம்சன் டாஸ் போட்ட பின்னர் உம்ரன் மாலிக் பற்றி கூறும்போது, “ஆர்வமூட்டும் ஒரு புதிய திறமை” என்றார். மேலும் ஆட்டம் முடிந்த பிறகும் வில்லியம்சன் கூறும்போது, “உம்ரன் மாலிக் நெட்ட்டில் உண்மையில் வேகமாக வீசினார். அவருக்கு வாய்ப்பளித்தது நல்ல விஷயம்” என்றார் வில்லியம்சன்.



    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2021 பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்பில்லை. படுமோசமான சீசனாக அமைந்தது, டேவிட் வார்னரை அவமதித்து வெளியேற்றினர். அதன் பலனை அனுபவிக்கின்றனர்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: