பாகிஸ்தானால் வந்த ஆபத்து.. இந்தியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தடை!

#IOC suspends 'all discussions' with India | எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் ஏதும் இந்தியாவில் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று சர்வதேச கூட்டமைப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #ISSFWorldCup

#IOC suspends 'all discussions' with India | எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் ஏதும் இந்தியாவில் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று சர்வதேச கூட்டமைப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #ISSFWorldCup

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுத்ததால், இந்தியா உடனான அனைத்து விதமான தொடர்புகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு (ஐஓசி) உத்தரவிட்டுள்ளது.

  புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடன் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விதமான தொடர்புகளையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே, டெல்லியில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

  Muhammad Khalil Akhtar, முஹமது கலீல் அக்தர்
  பாகிஸ்தான் துப்பாக்கிச்சுடுதல் வீரர் முஹமது கலீல் அக்தர்.


  ஆனால். பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பாக பாகிஸ்தானின் தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பிடம் (ஐஒசி) அளித்தது.

  இதனை அடுத்து, இந்தியா உடனான அனைத்து விதமான தொடர்புகளையும் ரத்து சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு (ஐஓசி) உத்தரவிட்டுள்ளது.

  இதுகுறித்து ஐஓசி வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் நடவடிக்கை ஒலிம்பிக் அமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. விளையாட்டில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்று பல முறை வலியுறுத்தியுள்ளோம்.

  டெல்லியில் நடைபெறும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியின்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் அந்தஸ்து பறிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

  ISSF World Cup, உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி
  உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி 2019


  மேலும், “இனிமேல் அனைத்து நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் தடையின்றி போட்டியில் பங்கேற்க அனுமதிப்போம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும் வரை இந்தியாவுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தமாட்டோம்.

  எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் ஏதும் இந்தியாவில் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று சர்வதேச கூட்டமைப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று ஐஓசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அடேங்கப்பா... இந்தியா - பாக். போட்டியைக்காண இவ்வளவு பேர் விண்ணப்பமா? மிரண்டு போன ஐசிசி!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: