டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்படுவது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை - இந்திய ஒலிம்பிக் சங்கம்

கனடாவும், ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்படுவது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை - இந்திய ஒலிம்பிக் சங்கம்
இந்திய ஒலிம்பிக் சங்கம்
  • Share this:
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் டோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் 2020 போட்டிகள் வரும் ஜூலை 24-ம் தேதி ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற உள்ளது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டுமென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் கோரிக்கைள் வைத்தது.

கனடாவும், ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் ஒலிம்பிக் சங்கமும் தீவிர ஆலோசனை நடத்தினர். போட்டிகளை நடத்துவது, வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது, உலகமெங்கும் போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலமா உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.


இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்  போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்படுமென்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டிக் பௌண்ட் யு.எஸ்.ஏ டூடே செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க செயலளார் ராஜீவ் மேத்தா கூறுகையில், “ ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமிருந்து எந்தவிமான அறிக்கையும் வரவில்லை. ஒலிம்பிக் தள்ளிவைப்பது குறித்து அவர்கள் 4 வாரங்களில் முடிவெடுப்பார்கள்“ என்று ஐ.ஏ.என்.எஸ் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்