கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடர்: கென்யாவை வீழ்த்தியது இந்தியா

news18
Updated: June 11, 2018, 7:46 AM IST
கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடர்: கென்யாவை வீழ்த்தியது இந்தியா
வெற்றியை கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்
news18
Updated: June 11, 2018, 7:46 AM IST
கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில், கென்யாவை வீழ்த்தி இந்தியா மகுடம் சூடியது. இப்போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன், சுனில் சேத்ரி, சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையைும் பெற்றார்.

மும்பையில் நடைபெற்று வந்த கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடரில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே ஆகிய அணிகள் பங்கேற்றன. முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியாவும், கென்யாவும் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில், கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்திய இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். 29-வது நிமிடத்தில், அனாஸ் கடத்தி தந்த பந்தை, கென்யாவின் பாதுகாப்பு அரணை உடைத்து கோல் கம்பத்துக்குள் நுழைத்து தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார் சுனில் சேத்ரி. இதையடுத்து, இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்த தொடரில் 8 கோல்கள் அடித்த இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு சிறந்த வீரருக்கான பரிசு வழங்கப்பட்டது. 102 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, 62 கோல்கள் அடித்து, சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸியுடன் 2-வது இடத்தில் உள்ளார். போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 81 கோல்களுடன், இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
First published: June 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...