முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

இரண்டாவது சுற்றில் ஆரம்பத்திலிருந்தே சிந்து ஆக்ரேஷமாக விளையாடியதால் வேகமாக முன்னேறினார். 2-வது சுற்றை 21-10 என்ற கணக்கில் வென்று பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தோனேஷியா ஓபன் பேட்டமிண்டன் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இ்ந்தியாவின் பி.வி.சிந்துவும், சீனாவின் சென் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் சுற்றில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் போட்டி பரபரப்பாக இருந்தது. முதல் சுற்றின் முடிவில் 21-19 என்ற புள்ளி கணக்கில் பி.வி.சிந்து அந்தச் சுற்றை கைப்பற்றினார்.

இரண்டாவது சுற்றில் ஆரம்பத்திலிருந்தே சிந்து ஆக்ரேஷமாக விளையாடியதால் வேகமாக முன்னேறினார். 2-வது சுற்றை 21-10 என்ற கணக்கில் வென்று பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஜப்பானின் யமாகுஷியும் மோத உள்ளனர்.

First published:

Tags: Badminton, PV Sindhu