ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டிகள் 2018: ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய போட்டிகள் 2018: ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

டுட்டூ சந்த்

டுட்டூ சந்த்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    ஆசிய விளையாட்டு 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் டுட்டூ சந்த் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா மேலும் 2 வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.

    இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பலத்த எதிர்பார்ப்பு மத்தியில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டுட்டீ சந்ந் களம் கண்டார். போட்டி தொடங்கியதும் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டா போல் டுட்டீ சந்த் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றார்.

    பந்தய இலக்கை 11.32 விநாடிகளில் கடந்து, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆரம்பம் முதலே முன்னிலையில் வந்த டுட்டீ சந்த், எல்லைக்கோடு அருகே வேகத்தை குறைத்ததால், நூலிழையில் தங்கத்தை தவறவிட்டார். இப்போட்டியில், பக்ரைன் வீராங்கனை எடிடியோங் 0.2 விநாடியில் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றினார். சீனாவின் யாங்லி வெய் வெண்கலத்தை வசப்படுத்தினார்.

    ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ், வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர், 45.69 விநாடிகளில் இலக்கை எட்டி 2-வது இடம் பிடித்தார். கத்தாரின் அப்தெல்லா ஹசன் தங்கமும், பஹ்ரைன் வீரர் அலி ஹாமிஸ் வெண்கலமும் வென்றனர். மற்றொரு இந்திய வீரரான ஆரோக்கிய ராஜ் 4-வது இடம் பிடித்து, தன் மீதான எதிர்பார்ப்பை பொய்யாக்கினார்.

    முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் ஹீமா தாஸ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர், 50.79 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான நிர்மலா 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். 7-வது நாள் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றாத போதும், தடகளத்தில் 3 வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Asian Games 2018