HOME»NEWS»SPORTS»indians are desperately searching for virat kohlis phone number on google to wish him on his birthday vin ghta
பிறந்தநாள் வாழ்த்து கூற விராட் கோலியின் தொலைபேசி எண்ணை கூகுளில் தேடிய ரசிகர்கள்!
"விராட் கோலி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ டவுன்லோடு" என்று பலர் தேடியுள்ளனர். இதனால் இன்று விராட் கோலி கூகுள் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளார். அவரது ரசிகர்கள் பலர் பேஸ்பூக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்களில் பல்வேறு விதமான வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் கோலி, பல மைல்கற்களை எட்டியுள்ளார். நவம்பர் 5, 1988ல் பிறந்த கோஹ்லிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் 7,240 ரன்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் 11,867 ரன்களையும் குவித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட சதங்களை விளாசியுள்ளார். இதனால் விராட்டை அவரது ரசிகர்கள் ‘ரன் மிஷின்’ என்று அழைக்கின்றனர்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் 2020ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 66வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு முதல் ஆர்சிபி அணி கேப்டனாக விளையாடி வரும் விராட் கோலி, இதுவரை ஒருமுறை கூட அணிக்கு கோப்பை பெற்று தரவில்லை. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த வருடம் அதற்கான முயற்சியைத் தீவிரமாக முன்னெடுத்துளார்.
இந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். ஆர்சிபி கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படும் நிலையில், விராட் கோலி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து கூறியுள்ள ஆர்பிசி நிர்வாகம், “ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த விராட் கோலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. விராட் கோலி ஐபிஎல் தொடரில் 191 போட்டிகளில் பங்கேற்று 5,872 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கும் விராட், ஒவ்வொரு போட்டியிலும் தனது ஈடுபாட்டை அதிகரித்து வருகிறார். முன்பு இருந்ததைவிட சிறப்பான உடற்பயிற்சியின் மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறார். கிங் கோஹ்லியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
ட்விட்டரில் புகைப்படங்கள், பதிவுகள், வீடியோக்கள் மூலம் ஏராளமானோர் கோஹ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இருப்பினும் இந்தியர்கள் பலர் தனிப்பட்ட முறையில் விராட் கோஹ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்த கூற விரும்புகின்றனர். இதற்காக கூகுளின் உதவியை நாடிய பலர் "விராட் கோலியின் தொலைபேசி எண் என்ன?" என்று ஆர்வமாக தேடியுள்ளனர். மேலும் "விராட் கோலி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ டவுன்லோடு" என்று பலர் தேடியுள்ளனர். இதனால் இன்று விராட் கோலி கூகுள் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளார். அவரது ரசிகர்கள் பலர் பேஸ்பூக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்களில் பல்வேறு விதமான வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.