Home /News /sports /

சாதித்துக்காட்டிய ‘ரியல் சிங்கப்பெண்கள்’..! இந்தியப் பெண்கள் கால்பந்து அணி வெற்றி

சாதித்துக்காட்டிய ‘ரியல் சிங்கப்பெண்கள்’..! இந்தியப் பெண்கள் கால்பந்து அணி வெற்றி

இந்தியப் பெண்கள் கால்பந்து அணி

இந்தியப் பெண்கள் கால்பந்து அணி

இது ஒருவகையில் நமக்கு வெற்றிதான் எனக் கூறியுள்ளார் அணியின் பயிற்சியாளர் மேமோல் ராக்கி.

  • News18
  • Last Updated :
வியட்நாமுக்கு எதிரானப் போட்டியில் இந்தியப் பெண்கள் கால்பந்து அணியினர் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

வியட்நாமில் நடைபெற்று வரும் FIFA நட்புறவுப் போட்டியில் வியட்நாம் மற்றும் இந்திய அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட சீரிஸில் பங்கேற்று விளையாடினார். கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமிடம் படுதோல்வி அடைந்தது.

நேற்று இரண்டாம் போட்டியில் இந்திய அணியினர் ஒரு கோல் அடித்து அந்தப் போட்டியில் வெற்றி பெற்றனர். அதன்மூலம், சீரிஸை சமன் செய்தனர். இதன் மூலம் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 34-ம் இடத்தில் உள்ள வியட்நாம் அணியை 58-வது இடத்தில் உள்ள இந்திய அணி எதிர்த்து போட்டியை டிரா செய்துள்ளது.

இது ஒருவகையில் நமக்கு வெற்றிதான் எனக் கூறியுள்ளார் அணியின் பயிற்சியாளர் மேமோல் ராக்கி. தொடர்ந்து தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு செயல்படுவோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மேலும் பார்க்க: அல்ட்ரா ஸ்லிம் தோற்றத்துடன் வெளியானது ஸ்மார்ட் Mi டிவி 5..!
Published by:Rahini M
First published:

Tags: Football

அடுத்த செய்தி