ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் சம்பளம்... கிரிக்கெட் வாரியம் முடிவு

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் சம்பளம்... கிரிக்கெட் வாரியம் முடிவு

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி

Indian Women Cricket Team | இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ.6 லட்சமும் வழங்கப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

  இந்நிலையில், இந்த கூட்டத்தின் முடிவில் பாலின பாகுபாடுகளை நீக்கும் முதல் நடவடிக்கையாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நிகராக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க : ரோஹித், கோலி, சூர்யகுமார் அசத்தல் - நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

  இதனால் இனிவரும் காலங்களில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஒது மாதிரியான சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய்ஷா கூறுகையில், “இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ.6 லட்சமும் வழங்கப்படும். மேலும் இந்த நடவடிக்கை பாலின பாகுபாடுகளை தடுக்க முதல் நடவடிக்கையாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Cricket, Sports