Tokyo Olympics : குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் தோல்வி

சதீஷ் குமார் தோல்வி

ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் சூப்பர் ஹேவி வெயிட் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் பங்கேற்றார். இரண்டாவது சுற்றில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ ப்ரோவூனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் சிறப்பாக சதீஷ்குமார் விளையாடினார்.

    பின்பு இரண்டாவது ரவுண்டிலும் ஜமைக்க வீரரருடன் சண்டையிட்டு காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில் சூப்பர் ஹெவி வெயிட் பிரிவுக்கான குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலோப் உடன் சதீஷ்குமார் பலப்பரீட்சை நடத்தினார்.



    ஆரம்பம் முதலே உஸ்பெகிஸ்தான் வீரரின் கையே ஓங்கியிருந்தது. ஏற்கெனவெ காயமடைந்திருந்த சதீஷ்குமாரால், எதிராளியின் குத்துகளை எதிர்கொள்ள முடியவில்லை.

    Also Read : மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் - 3 பதக்கங்களையும் அள்ளிய ஜமைக்கா



    அவரது முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தபடியே போட்டியில் தொடர்ந்தார். 3 சுற்றுகள் முடிவில் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த சதீஷ்குமார், ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: