இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா உறுதி!

கேப்டன் சுனில் சேத்ரி

சுனில் சேத்ரி சமீபத்தில் நடைபெற்ற 7வது இந்திய சூப்பர் லீக் தொடரில் (ISL) பெங்களூரு FC அணிக்காக விளையாடினார்.

  • Share this:
இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டனான சுனில் சேத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து சுனில் சேத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு மகிழ்ச்சியற்ற பதிவு - எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆறுதலான செய்தி, நான் நன்றாக உள்ளேன், கொரோனாவில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறேன். எனவே மீண்டும் கால்பந்து களத்திற்கு விரைவில் திரும்புவேன். அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்க அனைவருக்கும் நினைவூட்டுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

சுனில் சேத்ரி சமீபத்தில் நடைபெற்ற 7வது இந்திய சூப்பர் லீக் தொடரில் (ISL) பெங்களூரு FC அணிக்காக விளையாடினார். இருப்பினும் அந்த அணி இந்த சீசனில் சரியான முறையில் திறமையை வெளிப்படுத்த முடியாமல் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது.வரும் மார்ச் 25 மற்றும் 29ம் தேதி துபாயில், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுடனான நட்புறவு போட்டிகளில் கலந்து கொள்ளும் 35 பேர் கொண்ட உத்தேச அணி பட்டியலில் சுனில் சேத்ரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

2002 முதல் காலபந்தாட்டம் விளையாடி வரும் சுனில் சேத்ரி, உலக அளவில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்ததாக 2வது இடத்தில் சேத்ரி உள்ளார்.

இந்திய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் சுனில் சேத்ரியையே சேரும். அவர் 115 போட்டிகளில் 72 கோல்கள் அடித்துள்ளார். ஆசியாவின் ஐகான் என்ற பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 36 வயதாகும் சுனில் சேத்ரி செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஆவார்.
Published by:Arun
First published: