ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

400மீ ஓட்டப்பந்தயம்: அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி

400மீ ஓட்டப்பந்தயம்: அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி

அரை இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ள முகம்மது அனாஸ்.

அரை இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ள முகம்மது அனாஸ்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முகம்மது அனாஸ், அரோகியா ராஜிவ் ஆகியோர் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

  இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் 400மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கான தகுதிச் சுற்று  இன்று நடைபெற்றது.  இதில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் முகம்மது அனாஸ் பந்தய தூரத்தை 45.63 நொடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். ராஜிவ் 46.82 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 4-ம் இடம் பிடித்தார்.

  ஏற்கெனவே ஆசியப் போட்டிகளில் பந்தய தூரத்தை 45.24 நொடிகளில் ஓடி சாதனை படைத்துள்ள அனாஸ் தகுதிச் சுற்றில் முதலிடம் பெற்றார். கத்தாரின் முகம்மது அப்பாஸ்(45.81) மற்றும் இலங்கையின் கலிங்கா குமாரகே (45.99) முறையே 2 மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்தனர்.

  இந்தப் போட்டியின் அரையிறுதிச் சுற்று, இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும். முன்னதாக உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சேத்தன் பாலசுப்பிரமணி 2.15மீ உயர்த்தைத் தாண்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Asian Games 2018