தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி!

இந்திய அணி

தொடக்க வீரராக களமிறங்கிய எய்டென் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த களமிறங்கிய ப்ருயின் 8 ரன்களிலும், டூப்ளிஸிஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

  இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணி மூன்று டி-20, மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. ஏற்கெனவே, டி-20 தொடர் சமனில் முடிந்தது. இந்தநிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் 10-ம் தேதி தொடங்கியது.

  முதலில் பேட் செய்த இந்திய அணி, 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கோலி அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சின் காரணமாக முதல் இன்னிங்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  பாலோஆன் ஆன, தென் ஆப்பிரிக்கா அணி, இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய எய்டென் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த களமிறங்கிய ப்ருயின் 8 ரன்களிலும், டூப்ளிஸிஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

  அடுத்தடுத்த வந்த வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டமிழந்நிலையில், தென்ஆப்பிரிக்கா அணி 67 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வீன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ், 137 ரன்களில் தோல்வியடைந்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

  Also see:

  Published by:Karthick S
  First published: