ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா - பாக். இன்று மோதல் : ரோகித் தலைமையிலான அணி வெற்றியுடன் தொடங்குமா என எதிர்பார்ப்பு!

இந்தியா - பாக். இன்று மோதல் : ரோகித் தலைமையிலான அணி வெற்றியுடன் தொடங்குமா என எதிர்பார்ப்பு!

ரோகித்

ரோகித்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளதால், எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள், இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன... கடந்த உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு, இப்போட்டியில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் 8-வது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 16ம் தேதி தொடங்கின. முதல் சுற்று முடிவில் 4 அணிகள் தேர்வாகின. இரண்டாவது பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. மெல்போர்ன் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் போட்டியில், இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

    டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கிய போதும், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் மீதே இருந்தது. அதற்கான தருணம் வந்த நிலையில் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    சூப்பர் டுவெல்வ் சுற்றின் இரண்டாவது பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட், மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அண்மைக்காலமாக ஆல்-ரவுண்டராக ஜொலித்து வரும் ஹர்திக் பாண்ட்யா மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. பந்துவீச்சில் கடைசிக் கட்ட ஓவர்களில் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல், பும்ராவுக்கு பதில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி, ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. அவர், களம் காணும் பட்சத்தில் 2021 டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது சந்தித்த விமர்சனத்துக்கு, பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

    அதேவேளையில், பாகிஸ்தான் அணியின் தூண்களாக விளக்கும் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே, இந்த ஜோடியை பிரித்தாலே பந்துவீச்சாளர்களுக்கு பாதி வேலை முடிந்துவிடும். மேலும், ஷகீன் அப்ரிடியின் புயல் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். எனவே, இவரது பந்துவீச்சை தொடக்கம் முதலே அடித்து நொறுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கப்பீர் அறிவுறுத்தியுள்ளளார்.

    பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய ஐந்து டி-20 போட்டிகளில் இந்தியா மூன்றில் வெற்றிபெற்றது. ஆனால், கடைசியாக ஆடிய 3 போட்டிகளில் பாகிஸ்தான் இரண்டில் வெற்றியை வசப்படுத்தியது.

    மேலும், கடந்த 2021 டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இந்திய அணி தயாராகியுள்ளது. இதற்காக, ஆடும் லெவனை ஒரு வாரத்திற்கு முன்பே தேர்வு செய்ததாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

    இதையும் படிங்க... இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் அதிர்ச்சி..!

    இந்தியாவில் தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையான தீபாவளி ஒரு நாளைக்கு முன்பே கொண்டாடப்படுகிறது. இதனால், இந்திய அணி மெல்பர்ன் மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்த்தினால், இந்திய ரசிகர்கள் உலகம் முழுவதும் வாணவேடிக்கை நிகழ்த்த காத்திருக்கின்றனர்.

    கடைசியாக இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளில், தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இதனால், உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதும் தொடக்க போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வெற்றியுடன் தொடரை தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Cricket, India vs Pakistan