2 ரன்களில் சதத்தை தவறவிட்ட தவான்; அதிகமுறை 90 களில் ஆட்டமிழந்த வீரர்களின் வரிசையில் 3ம் இடம் பிடித்தார்!

2 ரன்களில் சதத்தை தவறவிட்ட தவான்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18வது சதம் அடிக்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார்.

  • Share this:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18வது சதம் அடிக்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார்.

இங்கிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 317 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது.

ரோகித் சர்மாவுடன் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் வீசிய ஆட்டத்தின் 39வது ஓவரில் மிட் விக்கெட்டில் இருந்த இயான் மார்கனிடம் கேட்ச் கொடுத்து தவான் ஆட்டமிழந்தார். இதன் மூலம் வெறும் 2 ரன்களில் தனது 18வது சதம் அடிக்கும் வாய்ப்பை ஷிகர் தவான் தவறவிட்டார். 90 ரன்களை கடந்த பின்னர் ரன் எடுக்கும் வேகத்தை தவான் குறைத்துவிட்டார், அவர் பதற்றத்துடன் காணப்பட்டார். இறுதியில் பதற்றத்தில் சதத்தை தவறவிட்டார்.

106 பந்துகலில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அவர் 98 ரன்கள் எடுத்திருந்தார்.90களில் ஷிகர் தவான் விக்கெட்டை இழப்பது இது 5வது முறையாகும். இதன் மூலம் 90களில் அதிக முறை விக்கெட்டை இழந்த இந்திய வீரர்களின் வரிசையில் அவர் 3ம் இடத்துக்கு வந்துள்ளார்.

இந்த வகையில் 90களில் அதிக முறை விக்கெட் இழந்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் ஜாம்பவான் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் (18) முதல் இடத்தில் உள்ளார்.

அதிக முறை 90களில் விக்கெட் இழந்த வீரர்கள்:

1. சச்சின் டெண்டுல்கர் - 18
2. முகமது அசாருதீன் - 7
3. ஷிகர் தவான் - 6
4. வீரேந்திர சேவாக் - 6
5. விராட் கோலி - 6
6. சவுரவ் கங்குலி - 6
7. மகேந்திர சிங் தோனி - 6

இங்கிலாந்துடனான டி20 தொடரில் தவானுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தவான் இத்தொடரில் வாய்ப்பு பெற்றார். (முந்தைய போட்டியில் கோலி தானே ஓப்பனிங் செய்வேன் என தெரிவித்திருந்தார்) . இருப்பினும் தன் மீது கோலி வைத்த நம்பிக்கையை வீண் போக விடாமல் தவான் இன்று விளையாடியுள்ளார்.
Published by:Arun
First published: