2வது டெஸ்ட்: பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி

news18
Updated: August 10, 2018, 3:36 PM IST
2வது டெஸ்ட்: பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி
கோலியுடன் தினேஷ் கார்த்திக் (கோப்புப்படம்)
news18
Updated: August 10, 2018, 3:36 PM IST
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிரிக்கெட்டின் மெக்கா எனக் கருதப்படும் லண்டன் மாநகரின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்க இருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியை பொறுத்தவரை ஒரு சில மாற்றங்களை விராட் கோலி செய்துள்ளார். புஜாரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் மற்றும் உமேஷ் யாதவ் உள்ளிடோர் அணியில் இடம்பெறவில்லை.

இப்போட்டியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்காதது, அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து 11 ஆட்டங்களிலும், இந்தியா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. மேலும், அண்மைக் காலமாக சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று இரண்டு ஸ்பின்னர்களோடு களமிறங்கும் இந்திய அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...