டி20: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!

news18
Updated: March 9, 2018, 12:29 AM IST
டி20: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
news18
Updated: March 9, 2018, 12:29 AM IST
வங்கதேசம் அணி உடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்தது வங்கதேச அணி. தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சவுமியா சர்கார் 14 ரன்களுடன் ஆட்டமிழந்தார், தமிம் இக்பால் 15 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் 18 ரன்களும், மெஹ்முதுல்லா 1 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

லித்தோன் தாஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, சபிர் ரஹ்மான் 30 ரன்கள் அடிக்க வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 139 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் உனத்கட் 3 விக்கெட்டும், விஜய் சங்கர் 2 விக்கெட்டும், ஷர்துல் தாகுர், சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். ரோகித் சர்மா 17 ரன்களுடனும், ரிஷப் பந்த் 7 ரன்களுடனும், தவான் 55 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா 28 ரன்களுடன் அவுட்டானார்.

அதன்பின் களமிறங்கிய மணீஷ் பாண்டேவும், தினேஷ் கார்த்திக்கும் இந்தியா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.
First published: March 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்