கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி.. ஜடேஜா தீவிர வலைப்பயிற்சி (வீடியோ)

கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி.. ஜடேஜா தீவிர வலைப்பயிற்சி (வீடியோ)

கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி

காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடாத ஜடேஜா, மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 • Share this:
  ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்க்சில் வெறும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது.

  இதற்கிடையே இந்திய கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியுள்ள நிலையில், ரோகித்சர்மாவும் தனிமை காலத்தில் உள்ளார். இந்த காரணங்களால் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ரஹானே வழிநடத்த உள்ளார்.

  காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடாத ஜடேஜா, மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். துவக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா ரன்சேர்க்கத் தடுமாறி வருவதை அடுத்து அவருக்கு பதில் கில் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

      

   

   

     இதற்காக சுப்மன் கில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: