India vs Australia ODI: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

IND vs AUS TOSS (PHOTO: BCCI)
- News18
- Last Updated: November 27, 2020, 9:16 AM IST
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மாவின் உடல்தகுதி குறித்து வரும் 11ம் தேதி மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
கொரோனா தொற்று பரவலால் இந்திய அணியின் சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டு வந்தன. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. போட்டியை காண மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் வீரர்களுக்கு இன்னும் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி: ஷிகர் தவன், மயங்க் அகர்வால், விராத் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, ஷமி, சைனி, ப்[உம்ரா, சாஹல்
ஆஸ்திரேலியா அணி: வார்னர், ஃபின்ச், ஸ்மித், மர்னஸ், மர்கஸ், கேரி, மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஸ்டார்க், ஆதம், ஜோஷ்
Also read... ஐ.பி.எல் 2020 தொடர் மூலம் ரூ.4,000 கோடி வருமானம் - பி.சி.சி.ஐ விளக்கம்
வானிலை தொடர்பான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இந்த தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மாவின் உடல்தகுதி குறித்து வரும் 11ம் தேதி மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
கொரோனா தொற்று பரவலால் இந்திய அணியின் சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டு வந்தன. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. போட்டியை காண மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் வீரர்களுக்கு இன்னும் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.