முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலிய மண்ணில் கோலி தலைமையில் இந்தியா வரலாற்றுச் சாதனை!

ஆஸ்திரேலிய மண்ணில் கோலி தலைமையில் இந்தியா வரலாற்றுச் சாதனை!

வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)

வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)

India vs Australia Test Series | ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெயரையும் இந்தியா பெற்றுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் திருத்தி எழுத முடியாமல் இருந்த சாதனையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எழுதியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 3 வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

பின்னர் மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து, சிட்னியில் நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரா ஆனதால், டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா வென்றது.

இதன்மூலம், இந்திய அணி 71 ஆண்டு கால வரலாற்றை முறியடித்து  முதல் முறையாக தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதுவரை ஆஸ்திரேலியா சென்று 11 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ள இந்திய அணி ஒரு முறை கூட கோப்பையை கையில் ஏந்தியது இல்லை என்ற வரலாற்றை விராட்கோலி மாற்றியமைத்துள்ளார்.

Kuldeep Yadav, குல்தீப் யாதவ்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு 1947-48 ம் ஆண்டில் லாலா அமர்நாத் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை எந்த கேப்டனும் படைக்காத சாதனையை கோலி படைத்துள்ளார்.

நடப்பு தொடரில் இந்தியாவின் நட்சத்திரங்கள் ஜொலித்ததுடன், இளம் வீரர்களையும் இந்திய கிரிக்கெட்டிற்கு அடையாளப்படுத்தியுள்ளது.

Virat Kolhi, இந்திய அணி
களத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI )

டெஸ்ட் போட்டியில் தோனியின் ஓய்விற்கு பிறகு நீண்ட நாட்களாக காலியாக இருந்த சிறந்த விக்கெட் கீப்பர் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்பியுள்ளார். அத்துடன் சேவாக்கைப் போல் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் உதித்துள்ளார்.

பேட்டிங்கில் புஜாரா 3 சதங்களை அடித்து அமர்க்களப் படுத்த, பந்துவீச்சில் பும்ரா விக்கெட்டுகளை தகர்த்தெறிந்து சாதனை மேல் சாதனை நிகழ்த்தியதே இந்தியாவின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு காரணங்களாகும்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெயரையும் இந்தியா பெற்றுள்ளது.

Also see... எதிர்பார்த்தது போலவே ரத்து செய்யப்பட்ட திருவாரூர் இடைத்தேர்தல்

First published:

Tags: Ind Vs Aus, India vs Australia 2018, Virat Kohli