தோனியை மிஸ் செய்யும் ரசிகர்கள் - சைகை மூலம் பதில் அளித்த விராட் கோலி; வைரல் வீடியோ!

விராட் மற்றும் தோனி

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி விளையாடும் போட்டிகளில் எல்லாம் தோனிக்கான குரல்கள் மைதானத்தில் எதிரொலித்த வண்ணம் உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போட்டியில் தோனியை மிஸ் செய்கிறோம் என ரசிகர்கள் பதாகை ஏந்தி இருந்ததை பார்த்த விராட்கோலி, சைகை மூலம் பதில் அளித்த காணொளி (video) இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் வந்திருந்தனர். அப்போது, ரசிகர்கள் சிலர், "We Miss you Dhoni" என்ற Poster-ஐ வைத்திருத்தனர். டீப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி (Virat kholi) அந்த போஸ்டரை பார்த்து, நானும் தோனியை Miss செய்கிறேன் என சைகை மூலம் தெரிவித்தார். இந்த வீடியோ  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி, 20 ஓவர் உலகக்கோப்பை என 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி (Dhoni). 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணிக்காக அவர் விளையாடவில்லை. திடீரென ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

Also read... தோனியை போன்று வேகமில்லை - ஸ்டெம்பிங்கை தவறவிட்ட ஆஸ்திரேலிய கேப்டனின் ஆடியோஇந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி விளையாடும் போட்டிகளில் எல்லாம் தோனிக்கான குரல்கள் மைதானத்தில் எதிரொலித்த வண்ணம் உள்ளன. 2வது 20 ஓவர் போட்டியில் தவானை, ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் (Mathew wade) ஸ்டம்பிங் (Stumping)செய்ய முயற்சித்தபோது, 'தோனி அளவுக்கு நான் துரிதமில்லை' என்று கூறினார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இதற்கிடையே, கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி (virat kholi) இந்தியா திரும்புகிறார். மனைவி அனுஷ்கா சர்மா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், அவருடன் இருப்பதற்காக விராட் கோலி இந்தியாவுக்கு வருகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: