முகப்பு /செய்தி /விளையாட்டு / தொடர் முழுவதும் இந்திய ஸ்பின்னர்கள் ஆதிக்கம் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கு நுழையும் வாய்ப்பில் இந்தியா?

தொடர் முழுவதும் இந்திய ஸ்பின்னர்கள் ஆதிக்கம் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கு நுழையும் வாய்ப்பில் இந்தியா?

இந்திய அணி

இந்திய அணி

India vs Australia Border gavaskar trophy | 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் அடுத்த முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து அஸ்வின் - அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 1 ரன் பின் தங்கி உள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்திருந்தது. இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா சுழலில் சிக்கி ஆஸ்திரேலிய அணி மள மளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளையும் இழந்தது.

சுழற்பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்த ஜடேஜா அதிரடியாக பந்துவீசி 7 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டையும் எடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 115-ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இலகை துரத்தி ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் வழக்கம்போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து வந்த பூஜாராவுடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 31 ரன்களுக்கு ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலியும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி 84 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய பரத் அதிரடியாகவும் பூஜாரா நிதானமாகவும் விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இந்திய அணி 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 118 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பூஜாரா 31 ரன்களும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 23 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இரு அணிகளுக்கு இடையே 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் மார்ச் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில்  இந்திய சுழல்பந்து வீச்சாளர்களை சமளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி திணறி வரும் நிலையில் அடுத்த போட்டியில் பல வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தூரில் நடைபெறும் அடுத்த போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபடும் என ஆஸ்திரேலிய அணி திட்டம் வகுத்துள்ளது. மேலும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் அடுத்த ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

First published:

Tags: Delhi, India vs Australia, Ravindra jadeja