HOME»NEWS»SPORTS»india vs australia backed by fathers mohammed siraj shubman gill earn test caps ahead of debut vin ghta

இந்திய அணியில் இடம்பிடித்து தந்தையர்களின் கனவை நனவாக்கிய முகமது சிராஜ், சுப்மன் கில்!

சுப்மான் கில் விளையாடும்போது சில நேரங்களில் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, ரிக்கார்டிங் பார்த்த காலம் எல்லாம் இருப்பதாகவும் அவர் கூறினார். 

இந்திய அணியில் இடம்பிடித்து தந்தையர்களின் கனவை நனவாக்கிய முகமது சிராஜ், சுப்மன் கில்!
சுப்மான் கில் விளையாடும்போது சில நேரங்களில் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, ரிக்கார்டிங் பார்த்த காலம் எல்லாம் இருப்பதாகவும் அவர் கூறினார். 
  • News18
  • Last Updated :
  • Share this:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இந்திய அணிக்காக முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் அறிமுகமாகியுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததால், அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சிறப்பாக விளையாடாத விருதிமான் சஹா மற்றும் பிரித்திவி ஷா ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளார். 

அதேபோல், இளம் வீரர்களான முகமது சிராஜ் மற்றும் சுப்மான் கில் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக இடம்பிடித்து தங்களின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை முகமது சிராஜூம், சுப்மான் கில்லும் தொடங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, சுப்மான் கில்லுக்கு டெஸ்ட் கிரிக்கெட் தொப்பியை வழங்கினார். முகமது சிராஜூக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் தொப்பியை வழங்கி அணிக்குள் வரவேற்றனர்.



அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் இருவரும் தங்களின் தந்தையரின் நெடுநாள் கனவை நனவாக்கியுள்ளனர். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள முகமது சிராஜின் தந்தை உடல் நலக்குறைவால் நவம்பர் 20ம் தேதி காலமானார். ஆனால், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்காத முகமது சிராஜ், இந்திய அணியுடன் இருக்க விருப்பம் தெரிவித்துவிட்டார். தனது தந்தையின் நெடுநாள் கனவான, தான் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றி அவருக்கான அஞ்சலியை செலுத்துவேன் என கூறிவிட்டார். 

மேலும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் கொரோனா கெடுபிடிகள் காரணமாக சிராஜ், இந்தியா திரும்பியிருந்தால் மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இந்நிலையில், இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பிடித்து தனது தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்து பேசிய சிராஜின் சகோதரர் இஸ்மாயில்,"ஆஸ்திரேலியாவில் இருந்து நாள்தோறும் தொலைபேசியில் பேசும்போது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கமுடியாததை நினைத்து சிராஜ் கண்கலங்குவார். 

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், கேப்டன் விராட்கோலியும் மிகப்பெரிய ஆதரவை சிராஜூக்கு கொடுத்துள்ளனர். இது தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், ஆட்டோ ரிக்சா ஓட்டிக்கொண்டிருந்த தனது தந்தை நிச்சயமாக இன்று மகிழ்ச்சியாக இருப்பார், அவர் எப்போதுமே இந்தியாவுக்காக சிராஜ் விளையாடி பெருமை சேர்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பார். அவருடைய கனவு இன்று நனவாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.

Also read... சுப்மன் கில், ஜடேஜா மோதல்.. வாவ் சொல்ல வைத்த அருமையான கேட்ச் - வீடியோ

இதேபோல், சுப்மான் கில்லின் தந்தையும் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இளம்வீரர் சுப்மான் கில் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது குறித்து பேசிய அவரது தந்தை லாக்விந்தர் (Lakhwinder), சுப்மான் கில்லின் கோச்சாகவும், தந்தையாகவும் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவித்தார். இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

சுப்மான் கில் விளையாடும்போது சில நேரங்களில் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, ரிக்கார்டிங் பார்த்த காலம் எல்லாம் இருப்பதாகவும் அவர் கூறினார்.  பஞ்சாப்பில் வசிக்கும் கில்லின் தாத்தா பாட்டியான திதார் சிங் மற்றும் குர்மெல் கவுர் ஆகியோர் இன்று சுப்மான் கில் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றும் லாக்விந்தர் கூறினார். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை கில் வெளிப்படுத்தி இருப்பதால், இந்திய அணிக்கான தனது முதல் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என கில்லின் தந்தை லாக்விந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: