முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜடேஜா சுழலில் சிக்கிய சிதறிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்.. வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி..!

ஜடேஜா சுழலில் சிக்கிய சிதறிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்.. வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி..!

அஸ்வின் -ஜடேஜா

அஸ்வின் -ஜடேஜா

India vs Australia 2nd Test | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 115 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில்  கடந்த  17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து அஸ்வின் - அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 1 ரன் பின் தங்கி உள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்திருந்தது. இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா சுழலில் சிக்கி ஆஸ்திரேலிய அணி  மள மளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளையும் இழந்தது.

சுழற்பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்த ஜடேஜா அதிரடியாக பந்துவீசி 7 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டையும் எடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 115-ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எளிதான வெற்றி இலக்குடம் இந்திய அணி பேட்டிங் ஆடி வருகிறது.

First published:

Tags: Delhi, India vs Australia, Ravindra jadeja