Home /News /sports /

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்!

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்!

செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணி.

செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணி.

Chess Olympiad: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓப்பன் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. தங்கப் பதக்கத்தை உஸ்பெகிஸ்தானும், வெள்ளிப்பதக்கத்தை அர்மேனியா அணிகளும் வென்றுள்ளன.

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றது. அப்போட்டி இன்று கடைசி நாளை எட்டியுள்ளது. 187 நாடுகள் பங்குபெற்ற இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வலுவானதாகவும், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள அணியாகவும் கருதப்பட்டது.

    இந்நிலையில் ஓப்பன் பிரிவில் நடந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், பிரக்கியானந்தா, அதிபன் பாஸ்கரன், ரவுனக் சத்வானி மற்றும் நிகல் சரின் உள்ளிட்டோர் அடங்கிய அணி இந்தியா சார்பில் விளையாடியது.



    ஐவர் அடங்கிய இந்த அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022

    அடுத்த செய்தி