இந்தோனேஷியாவில் வரும் 23ந்தேதி முதல் ஜீன் 1ந்தேதி நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. 100 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை "ஹாக்கிபட்டி" எனவும் அழைப்பர். தேசிய ஹாக்கி அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடியுள்ளனர்.
தற்போது ஆசிய ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மாரீஸ்வரன் சக்திவேல் . கார்த்திக் இருவரும் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாரீஸ்வரன் சக்திவேல் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர் சக்திவேல் மகன் ஆவார்.
இந்திய ஹாக்கி அணி
கோல்கீப்பர்கள் - பங்கஜ் குமார் ரஜாக், சூரஜ் கர்கேரா
டிஃபெண்டர்கள் - ருபிந்தர் பால் சிங் (கேப்டன்), யஷ்தீப் சிவாச், அபிசேக் லக்ரா, பிரேந்திர லக்ரா (துணை கேப்டன்), மஞ்சீத், திப்சன் டிர்கி;
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.