4-வது ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி

news18
Updated: February 11, 2018, 7:06 AM IST
4-வது ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
news18
Updated: February 11, 2018, 7:06 AM IST
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா, 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், தவான் - விராட் கோலி ஜோடி பொறுப்புணர்ந்து விளையாடியது. கோலி 75 ரன்களில் வெளியேறிய நிலையில், 100-வது போட்டியில் விளையாடிய தவன், தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்தார். 105 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் குவித்தார்.

பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாட தவறியதால் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது மழை குறுக்கிட்டத்தால், வெற்றி இலக்கு 28 ஓவர்களில் 202 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது.

202 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 25.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதில் தோற்றபோதும் 6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3க்கு1 என முன்னிலை வகிக்கிறது.
First published: February 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்