“வெளிநாட்டு வீரர்களை பிடித்திருந்தால் இந்தியாவில் வாழாதீர்கள்”: கோலி காட்டம்

இந்திய கிரிக்கெட் வீரர்களை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை தாம் ரசிப்பதாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு விராட் கோலி கடுமையாக பதிலளித்துள்ளார்.

news18
Updated: November 8, 2018, 10:47 AM IST
“வெளிநாட்டு வீரர்களை பிடித்திருந்தால் இந்தியாவில் வாழாதீர்கள்”: கோலி காட்டம்
விராட் கோலி (கோப்புப் படம்)
news18
Updated: November 8, 2018, 10:47 AM IST
உங்களுக்கு வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பிடித்திருந்தால் இந்தியாவில் வாழாதீர்கள் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள கைபேசி செயலி வழியாக ரசிகர்களின் கேள்விக்கு விராட் கோலி பதில் அளித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் எனக்கு இந்திய பேட்ஸ்மேன்களை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களைத்தான் பிடிக்கும் என ரசிகர் ஒருவர் அனுப்பிய செய்தியை கோலி படிக்கிறார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அப்படியென்றால் ஏன் இந்தியாவில் இருக்கின்றீர்கள்.வேறு எங்காவது சென்று வாழ வேண்டியதுதானே என கோலி காட்டமாக சமூக வலைதளங்களில் கேள்வி கேட்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி


கோலியின் இந்த கடுமையான கேள்விக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் விராட் கோலி கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Also see...

First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்