தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு

India vs South Africa | வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா இடம்பிடித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: September 13, 2019, 12:41 PM IST
தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
India vs South Africa | வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா இடம்பிடித்துள்ளனர்.
Web Desk | news18
Updated: September 13, 2019, 12:41 PM IST
தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர் ஷுப்மான் கில்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென்ஆப்ரிக்கா இடையே காந்தி - மண்டேலா சுதந்திர கோப்பை டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா வரும் தென்ஆப்ரிக்க அணி 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.


இதன், முதல் போட்டி காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே ஆகிய முன்னணி வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுடன் விஹாரி-யும் இணைந்துள்ளார்.

அத்துடன், விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த் மற்றும் விரிதிமன் சஹா தேர்வாகியுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீவ் யாதவ் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Loading...

மேலும், வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா இடம்பிடித்துள்ளனர்.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் தொடரில் பங்கேற்ற லோகேஷ் ராகுல், பெரிய அளவில் சோபிக்காததால் அவர் நீக்கப்பட்டு, இளம் வீரர் ஷுப்மான் கில்-க்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று இரவு 7 மணிக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதாக செய்தி வெளியானது. அப்போது, அவர் ஓய்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் எனவும் கூறப்பட்டது.

ஆனால், இது முற்றுலும் தவறான செய்தி என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். அத்துடன், தோனியின் ஓய்வு குறித்து எந்தவொரு பேச்சும் அடிபடவில்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Also see...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...