Home /News /sports /

காமன்வெல்த் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்ற இந்தியா!

காமன்வெல்த் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்ற இந்தியா!

Jeremy Lalrinnunga

Jeremy Lalrinnunga

CWG 2022 | ஆண்களுக்கான 67 கிலோ எடைபிரிவு பளு தூக்கும் போட்டியில், லால்ரினுகா ஜெரிமி தங்கம் வென்றுள்ளார்.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

    பிர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி கடந்த 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியாவிலிருந்து 211 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். சென்ற ஆண்டு வரை இந்திய அதிகமாக பதக்கங்கள் வென்ற துப்பாக்கி சுடும் போட்டி இம்முறை காமன்வெல்த் போட்டியில் சேர்க்கப்படவில்லை.

    இந்நிலையில் முதல் நாள் நடைபெற்ற போட்டியில் இந்தியா எந்த பதக்கத்தையும் பெறவில்லை. ஆனால் 2ஆவது நாளில் இந்தியா, ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றது. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு தங்கம் வென்றார்.

    இதே போன்று ஆடவர் 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சாங்கேட் வெள்ளி பதக்கத்தையும், 61 கிலோ எடை பிரிவில் குருராஜா வெண்கலம் வென்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற மகளிருக்கான 55 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை பிந்தியா ராணி ஸ்நாட்ச் பிரிவில் 86 கிலோ எடையையும், கிளின் அண்ட் ஜர்க் பிரிவில் 116 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

    தற்போது அதே பளுதூக்கும் போட்டியில், இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 67 கிலோ எடைபிரிவு பளு தூக்கும் போட்டியில், லால்ரினுகா ஜெரிமி தங்கம் வென்றுள்ளார். இவர் ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Commonwealth Games, India

    அடுத்த செய்தி