இந்தியாவுக்கு ஒலிம்பிக் கவுன்சில் எச்சரிக்கை!

ஐ.ஓ.ஏ தலைவர் நரிந்தர் பத்ரா

India Gets Olympic Warning After Kosovo Boxer Denied Visa | இந்தியா விசா வழங்காவிட்டால் சர்வதேச விளையாட்டு தொடரை இழக்க நேரிடும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெல்லியில் 10-வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 5 முறை உலகச்சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் உள்ளிட்ட 10 வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். சொந்த மண்ணில் நடைபெறுவதால் உள்ளூர் ரசிகர்களுடன் ஆதரவுடன் இந்திய வீராங்கனைகள் பதக்க வேட்டை முனைப்பில் உள்ளனர்.

கொசோவோ நாட்டு வீராங்கனைக்கு விசா மறுப்பு:

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு வீராங்கனைகளுக்கு விசா கொடுக்கப்பட்ட நிலையில், கொசோவோ என்ற நாட்டின் வீராங்கனை டோன்ஜெட்டா சாடிகு-க்கு மட்டும் விசா வழங்க இந்தியா மறுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக பெரிதாகி உள்ளது. தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோவை தனி நாடாக அங்கீகரிக்கும் வாக்கெடுப்பில் 193 நாடுகளில் 113 நாடுகள் மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அங்கீகாரம் வழங்காத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால், விசா மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை:

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் கொசோவோ நாட்டை அங்கீகரித்துள்ளது. அதனால், இந்தியா விசா வழங்காவிட்டால், பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

களத்தில் மல்லுக்கட்டும் வீராங்கனைகள்


சர்வதேச விளையாட்டு தொடரை இழக்க நேரிடும்:

அண்மையில், ஸ்பெயின் நாட்டில் நடந்த சர்வதேச விளையாட்டுத் தொடர் ஒன்றில் இதேபோன்ற பிரச்சனை காரணமாக கொசோவோ நாட்டு வீரர்களுக்கு விசா வழங்கப்படவில்லை. இதனால், கடும் கோபம் அடைந்த சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம், இனி ஸ்பெயினில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளது. ரியோ ஒலிம்பிக் தொடரில் விளையாட கொசோவோ வீரர்கள் அனுமதி கொடுக்கப்பட்டதைப் போல, இந்தியாவும் அனுமதித்தால் மட்டுமே ஒலிம்பிக் சம்மேளனத்தின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும்.

மேலும் பார்க்க...

Published by:Murugesan L
First published: