Home /News /sports /

ஆசிய வாலிபால் போட்டி: இந்தியா வெண்கலம் வென்றதோடு யு-19 உலகக்கோப்பைக்கு தகுதி

ஆசிய வாலிபால் போட்டி: இந்தியா வெண்கலம் வென்றதோடு யு-19 உலகக்கோப்பைக்கு தகுதி

இந்திய வாலிபால் அணி

இந்திய வாலிபால் அணி

இந்திய ஆடவர் வாலிபால் அணி 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Inte, IndiaTehranTehranTehranTehran
டெஹ்ரானில் நடைபெற்ற 14வது ஆசிய 18 வயதுக்குட்பட்டோர் வாலிபால் விளையாட்டுத் தொடரில் இந்திய ஆடவர் அணி தென் கொரியாவை 3-2 என்று வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.

தென் கொரியா 1999ம் ஆண்டு சாம்பியன் மற்றும் முந்தைய ஆசிய வாலிபால் போட்டித் தொடரில் வெள்ளி வென்றது. ஏற்கெனவே இந்தியாவிடம் குரூப் ஸ்டேட்ஜில் நேர் செட்களில் தோல்வி அடைந்தது. ஆனால் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆட்டம் உச்சக்கட்ட போட்டிக்குச் சென்றது. 5 செட் திரில்லரில் இந்திய அணி தென் கொரியாவை  25-20,  25-21,  26-28, 19-25, 15-12 என்று அபார வெற்றி பெற்றது.

Also Read: இந்திய பவுலிங்கை பிரித்து மேய்ந்த சிகந்தர் ரசா சதம்; ஷுப்மன் கில் பேட்டிங், கேட்சினால் இந்தியா 3-0 வெற்றி

2003-ல் இதே தொடரில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி. அதன் பிறகு தங்கத்துக்கு நெருக்கமாக வரும் ஆனால் தங்கம் வென்றதில்லை. 2005 முதல் 2008 வரை இந்தியா இதே தொடரில் 2 வெண்கலம், ஒரு வெள்ளி வென்றுள்ளது.

நேற்று இந்திய அணியில் குஷ் சிங், துர்வில் படேல், சேகர் துரன், கபிலன், ஆர்யன், லைபிரோ, யமன் காதிக் ஆகியோர் இந்திய வெண்கலப்பதக்கத்துக்கு பங்களிப்பு செய்தனர்.  இதே தொடரில் காலிறுதியில் சீன தைபேயை வென்ற இந்திய அணி, அரையிறுதியில் ஈரானிடம் தோற்றது. வெண்கலப் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி யு-19 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: India, Sports Player

அடுத்த செய்தி