ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நியாயமான பிட்ச் தயாரித்த ஊழியர்களுக்கு ரூ.35,000 கொடுத்த ராகுல் திராவிட்- நான் ‘வேற’ என்று நிரூபித்தார்

நியாயமான பிட்ச் தயாரித்த ஊழியர்களுக்கு ரூ.35,000 கொடுத்த ராகுல் திராவிட்- நான் ‘வேற’ என்று நிரூபித்தார்

இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியை தோற்றவுடன் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் பந்திலிருந்தே பிட்சின் மண் பெயர்ந்து வந்து 3 நாட்களில் முடியும் பிட்சை போட்டார்கள், காரணம் விராட் கோலி, ரவி சாஸ்திரி.

 • 2 minute read
 • Last Updated :

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று அபாரமான முறையில் டிரா ஆனது. இருதரப்புக்கும் சாதகமான ஸ்போர்ட்டிங் பிட்சைத் தயாரிக்க ஷிவ்குமார் தலைமை பிட்ச் தயாரிப்புக் குழுவுக்கு ராகுல் திராவிட் ரூ.35,000 கொடுத்துள்ளார்.

  உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் தன் அறிவிப்பில், “நாங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுகிறோம். ராகுல் திராவிட் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ.35,000 கொடுத்துள்ளார்” என்று அறிவித்தே விட்டது.

  நிச்சயம் ராகுல் திராவிட் மற்றவர்களை விட தான் வேறு மாதிரி என்பதை நிரூபித்துள்ளார், கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் கிரிக்கெட் நமக்கு கற்றுக்கொடுக்கும் வாழ்வின் மதிப்பீடுகள் இன்றியமையாதது. நேர்மை, போட்டித்தன்மை, நட்பு, வேகம், விவேகம், உத்வேகம், சகிப்புத் தன்மை, விளையாட்டை விளையாட்டாக பார்க்கும் தன்மை, மகிழ்வுடன் ஒரு காரியத்தைச் செய்வது போன்ற மதிப்பீடுகள்தான் கிரிக்கெட். வணிகமயமான கிரிக்கெட்டினால் இவையெல்லாம் காணாமல் போய் விட்டன.

  நேற்று போதிய வெளிச்சமின்மையினால் 90 ஓவர் முடிந்தாலும் இன்னும் 7-8 நிமிடங்கள் போட்டி முடிவதற்கு இருந்தது, இன்னும் 2 ஓவர்கள் சாத்தியம்தான், ஆனால் நடுவர் நிதின் மேனன், ஷர்மா வெளிச்சமின்மையினால் போதும் என்றார், இதனை வரவேற்ற கேப்டன் ரஹானே, ‘வெளிச்சமின்மை குறித்த நடுவரின் முடிவு சரியானதே’ என்றார். அஸ்வினும் எப்போதும் கான்பூரில் ஆட்டம் முடியும் போது வெளிச்சம் பிரச்சனைதான், ட்ரா ஆனாலும் கிரேட் டெஸ்ட் மேட்ச் என்றார். இதுதான் ஸ்போர்டிங் ஸ்பிரிட் என்பது.

  இதே இடத்தில் கோலி, ரவிசாஸ்திரியை நினைத்துப் பார்த்தால்... தன் பாடி லாங்குவேஜைக் காட்டி நடுவர்களிடம் சண்டை போடுவார். அதாவது நமக்கு ஒரு விக்கெட் தேவை அவர்கள் வெற்றி பெற 4 ரன்கள் தேவை என்றால் போட்டியை அதன் உண்மையான முடிவு நேரத்துக்கு நகர்த்துவதில் பிரச்சனையில்லை, வெளிச்சமில்லை என்றால் கூட. ஆனால் ஒரு அணிக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் எனும்போது இருட்டில் ஆடவைப்பது முறையாகாது என்கிறார் சுனில் கவாஸ்கர், ஆனால் கோலிக்கு எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும், இந்த மனநிலையினால்தான் இன்று ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணியையே அழித்து விட்டனர். நல்ல வேளையாக ராகுல் திராவிட் வந்தார். ஆனால் கோலி, அனில் கும்ப்ளேயைச் செய்தது போல் ராகுல் திராவிடையும் செய்து விடுவாரோ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், அது இனி முடியாது என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.

  இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியை தோற்றவுடன் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் பந்திலிருந்தே பிட்சின் மண் பெயர்ந்து வந்து 3 நாட்களில் முடியும் பிட்சை போட்டார்கள், காரணம் விராட் கோலி, ரவி சாஸ்திரி.

  ஆனால் இந்த கான்பூர் டெஸ்ட் போட்டியின் முன்பு இப்படி பிட்ச் வேண்டும் என்று எந்த ஒரு அறிவுறுத்தலும் தனக்கு அணியின் தரப்பிலிருந்து வரவில்லை என்று கூறினார் கிரவுண்ட்ஸ்மென் ஷிவ்குமார். இந்நிலையில்தான் ஷிவ்குமார் தலைமை கிரவுண்ட்ஸ்மென் குழுவுக்கு ராகுல் திராவிட் ரூ.35,000 கொடுத்து ஸ்போர்ட்டிங் பிட்சை தயாரிக்கச் சொல்லியிருக்கிறார்.

  இது ஏதோ செய்தி அல்ல கிரிக்கெட்டின் மதிப்பை உயர்த்திப் பிடிப்பதில் இந்திய கிரிக்கெட் இன்னும் ஒரு படிமேலே சென்றுள்ளது இதன் முன்னுதாரணமாக ராகுல் திராவிட் திகழ்கிறார் என்று கூறலாம்.

  First published: