ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Ban | இந்தியா - வங்கதேசம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. இந்திய டீம் உத்தேச அணி விவரம்.!

Ind vs Ban | இந்தியா - வங்கதேசம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. இந்திய டீம் உத்தேச அணி விவரம்.!

கிரிக்கெட்

கிரிக்கெட்

IND VS BAN 1st ODI Cricket : இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில், முதல் ஒருநாள் போட்டி, டாக்காவில் உள்ள ஷெரீ பங்களா தேசிய மைதானத்தில், இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

இதற்காக, டாக்கா சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்யிற்சியில் ஈடுபட்டனர். நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் மற்றும் விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளனர். எனவே, இந்திய அணி முழு பலத்துடன் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அதேவேளையில், சொந்த மண்ணில் சவால் அளிக்கும் நோக்கில் வங்கதேச அணி ஆயத்தமாகியுள்ளது.

எனவே, இந்திய அணி முழு பலத்துடன் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அதேவேளையில், சொந்த மண்ணில் சவால் அளிக்கும் நோக்கில் வங்கதேச அணி ஆயத்தமாகியுள்ளது. இதனிடையே, ஒருநாள் தொடருக்கான வெற்றிக் கோப்பையை, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்

இந்த போட்டியை சோனி நிறுவனம் ஒளிபரப்பு செய்வதால் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக பார்க்கலாம். ஆன்லைனில் sony.liv-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

உத்தேச இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்) ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (துணை கேப்டன்) ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், தீபக் சாஹர், முகமது சிராஜ்

First published:

Tags: Cricket