ஃபிஃபா 2018: கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளிச்சென்ற அணிகள்

news18
Updated: July 16, 2018, 10:23 AM IST
ஃபிஃபா 2018: கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளிச்சென்ற அணிகள்
கோடிக்கணக்கில் பரிசளித்த உலகக்கோப்பை கால்பந்து தொடர்
news18
Updated: July 16, 2018, 10:23 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரில், பங்கேற்ற அணிகள் கோடிகளில் பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளன.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் விமரிசையாக  கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கான பரிசுத் தொகையும் வியப்பளிக்கும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ. 2, 700 கோடியாக அறிவிக்கப்பட்டது.

இதில், சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி, இரண்டாம் இடம்பிடித்த குரோஷிய அணிக்கு 190 கோடி ரூபாய் கிடைத்தது.

மூன்றாவது இடம் பிடித்த பெல்ஜியம் அணிக்கு ரூ. 161 கோடியும், நான்காவது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ. 148 கோடியும் கிடைத்தது.

காலிறுதியில், தோல்வியுற்ற உருகுவே, பிரேசில், ரஷ்யா மற்றும் சுவீடன் அணிகளுக்கு தலா 107 கோடி ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. அத்துடன், நாக்-அவுட் சுற்றில் வெளியேற்றப்பட்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல், ஸ்பெயின் உட்பட 8 அணிகளுக்கு தலா 80 கோடி ரூபாய் கிடைத்தது. மேலும், லீக் சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறிய அனைத்து அணிகளுக்கும் தலா 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
First published: July 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...