• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஃபெடரர் செஞ்சுரி அடிப்பதை தடுத்து இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

ஃபெடரர் செஞ்சுரி அடிப்பதை தடுத்து இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்

செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்

டென்னிஸ் அரங்கில் இதுவரை 99 சர்வதேச பட்டங்களை வென்றுள்ள ஃபெடரர் இந்த தொடரை கைப்பற்றி 100-வது பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் 100-வது சர்வதேச பட்டத்தை வெல்லும் ஃபெடரரின் முயற்சி தாமதமாகியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர்களான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், நோவாக் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர். இரண்டு அனுபவம் வாய்ந்த வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியால் முதல்செட் டைபிரேக்கர் வரை நீடித்தது. அதை ஜோகவிச் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை ஃபெடரர் 7-5 என கைப்பற்றினார்.



    வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் சம பலத்தை வெளிப்படுத்தியதால், அது டைபிரேக்கர் வரை நீடித்தது. அதில் வெற்றி பெற்ற ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். டென்னிஸ் அரங்கில் இதுவரை 99 சர்வதேச பட்டங்களை வென்றுள்ள ஃபெடரர் இந்த தொடரை கைப்பற்றி 100-வது பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.



    முன்னதாக நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் கரன் கோக்கானோவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை 6-4 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: