பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்

இகா ஸ்வியாடெக்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் . இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனினும் போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் மோதினர். இதில் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

  இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபேல் நடாலுடன் ஜோகோவிச் மோதுகிறார்.  Also read... IPL 2020 | விராட் கோலி ஆக்ரோஷ ஆட்டம் - புகைப்படங்கள்

  இருவரும் இதுவரை 55 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றனர். இதில் ஜோகோவிச் 29 முறையும், நடால் 26 தடவையும் வென்றுள்ளனர். பிரெஞ்ச் ஓபனில் 7 முறை மோதியுள்ள இந்த ஜோடியில் நடால் 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: