ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா தோல்வியடைந்தால் வீரர்களை திட்டுங்கள்.. ஐபிஎல்-ஐ விமர்சிப்பது நியாயமல்ல- கம்பீர்

இந்தியா தோல்வியடைந்தால் வீரர்களை திட்டுங்கள்.. ஐபிஎல்-ஐ விமர்சிப்பது நியாயமல்ல- கம்பீர்

கம்பீர்

கம்பீர்

இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும் - கவுதம் கம்பீர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தால் வீரர்களைதான் விமர்சிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் தொடரை அல்ல என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பை தொடர்பில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், ஐபிஎல் தொடரையும் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சர்வதேச போட்டிகளில் வீரர்கள் காட்டுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்பியுமான கவுதம் கம்பீர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டுக்கு நடந்த மிகச்சிறந்த விஷயம். நான் இதை முழு மனதுடன் சொல்லுகிறேன். ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்தே பல எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. ஒவ்வொரு முறையும் இந்திய கிரிக்கெட் சிறப்பாக செயல்படாதபோது, ஐபிஎல் மீது பழி வருகிறது, இது நியாயமில்லை. ஐசிசி போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களை குறை கூறுவோம், செயல்பாட்டின் மீது குற்றம் சாட்டுவோம், ஆனால் ஐபிஎல் மீது விரல் நீட்டுவது நியாயமற்றது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கால்பந்து உலகக்கோப்பை: மெஸ்ஸியின் மேஜிக் ஆட்டம்.. வெற்றிப் பாதைக்கு திரும்பிய அர்ஜென்டினா அணி

மேலும், இந்திய அணிக்கு இந்திய பயிற்சியாளர்களை நியமித்து வருவதற்காக பிசிசிஐ-க்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன். ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது.

இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கம்பீர் தெரிவித்தார். 

First published:

Tags: Cricket, Gowtham gambir, IPL