ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 world cup: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அபார வெற்றி

T20 world cup: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அபார வெற்றி

பாகிஸ்தான் அணி வெற்றி

பாகிஸ்தான் அணி வெற்றி

Pak Vs South Africa match Results: 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்த போது, 8வது ஓவரில் மழை குறுக்கிட்டது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, Indiasydneysydneysydney

  உலகக்கோப்பை டி20  கிரிக்கெட் போட்டியில் இன்று  நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

  சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிரிகொண்டது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்-ஐ தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது.

  இதனையடுத்து, 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்த போது, 8வது ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து,  14 ஓவருக்கு 142  ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

  5 ஓவரில் 73 என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆபிரிக்க அணி, பாகிஸ்தான் அணியின் ஆழமான டெத் ஓவர் பந்து வீச்சில் பின்வாங்கத் தொடங்கியது. ஆட்டத்தின் முடிவில் 33 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: T20 World Cup