நவம்பர் மாதத்தின் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு அதிரடி ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர், நியூசிலாந்தின் அபார ஸ்விங் பவுலர் டிம் சவுதீ ஆகியோர் உட்பட சில வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதே போல் பெண்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் இடது கை ஸ்பின்னர் ஆனம் அமின், பங்களாதேஷின் நஹிதா அக்தர் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆடவர் கிரிக்கெட் பிரிவில் பங்களாதேஷுக்கு எதிராக கலக்கும் பாகிஸ்தான் தொடக்க வீரர் அபிட் அலி பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் 133 மற்றும் 91 என்று பாகிஸ்தான் வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தினார்.
டேவிட் வார்னர் டி20 உலகக்கோப்பையில் மீண்டும் பார்முக்கு வந்து அசத்த ஆஸ்திரேலியா உலக டி20 கோப்பையை முதன் முதலாக வென்று அசத்தியது. ஆஷஸ் தொடரில் இன்று ஜோ ரூட்டுக்கு அற்புதமான கேட்சை எடுத்தார்.
Ashes 2021-22- ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நேருக்கு நேர் முழு விவரம்
டிம் சவுதீ இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் கேப்டன்சி செய்தார், டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்மூர் மட்டைப் பிட்சில், குழிப்பிட்சில் அற்புதமாக ஸ்விங் செய்து இந்திய பேட்ஸ்மென்களின் எட்ஜ்களைப் பிடித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.