ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் 7 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது சிக்ஸ் லைனிற்கு அருகில் உள்ள சில ரசிகர்கள் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை நிறத்தை வைத்து விமர்ச்சனம் செய்துள்ளனர். இதனால் வருத்தமடைந்த இந்திய வீரர்கள் கேப்டன் ரஹானேவிடம் தெரிவித்து நடுவரிடம் புகார் அளித்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிற வெறி விமர்சனம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும் அதே போல் சிக்ஸ் லைனில் நின்று கொண்டிருந்த சைனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரையும் நிற வெறி விமர்சனம் செய்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய வீரர் சிராஜ் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு களநடுவரிடம் புகார் அளித்தார். இதனால் போட்டி 10 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பார்வையாளர்கள் பகுதியில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நிற வெறி விமர்ச்சனம் செய்த ரசிகர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றினர். அப்போது ரசிகர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின், நிற வெறி விமர்ச்சனத்திற்கு நானும் ஆளாகியுள்ளேன். சிட்னியில் இதுபோன்ற நிறவெறி தாக்குதல் இதற்கு முன் நிறைய முறை நடந்துள்ளதாகவும் இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் 2008 ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸை குரங்கு என விமர்ச்சனம் செய்தது, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட நிறவெறி தாக்குதலை தொடர்ந்து இந்த விவகாரமும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தங்கள் நாட்டு ரசிகர்களின் செயல்பாடு குறித்து இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் போட்டியின் போது மைதானத்தில் பெரிய திரையில் நிறவெறி குறித்து விமர்ச்சனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒளிபரப்பப்பட்டது. சிட்னி டெஸ்டில் நடைபெற்ற நிறவெறி விமர்சனம் விளையாட்டு உலகத்தை வெட்கி தலைகுனியவைத்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC, India Cricket